குண்டும் குழியுமான சாலைகள் சீரமைப்பு

பந்தலூர்,பிப்.21: பந்தலூரில் குண்டும் குழியுமான சாலைகள் நெடுஞ்சாலை துறை சார்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. பந்தலூர் தேவகிரி முதல் பந்தலூர் பஜார் வரையுள்ள நெடுஞ்சாலை ஆங்காங்கு பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்து வருகிறது.அதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனைத்தொடர்ந்து பழுதடைந்துள்ள இடங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

 

Related Stories: