மதுபாட்டில்கள் பறிமுதல்

சிவகாசி, பிப்.21: சட்டவிரோதமாக விற்பதற்காக பதுக்கிய 53 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விருதுநகர் ரோட்டில் திருத்தங்கல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்னதம்பி (63) என்பவர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து போலீசார் சின்னதம்பியை கைது செய்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போன்று சிவகாசி சிறுகுளம் கண்மாய் பகுதியில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சிவகாசி நந்தவன தெருவை சேர்ந்த பொன்முனியாண்டி (53) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

 

Related Stories: