மதுரை, பிப். 21: மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டிற்கு தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் தினசரி டன் கணக்கில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே முகூர்த்தம் மற்றும் விஷேங்களால் காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. இருந்த போதிலும் வரத்து அதிகரிப்பால் வெங்காயத்தின் விலை குறைந்து காணப்பட்டது.
இதில் கடந்த மாதம் வரையில் மார்க்கெட்டில் நாட்டு வெங்காயம் கிலோ ரூ.60 முதல் ரூ.80க்கு விற்பனை ஆனது. இதில் தற்போது வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் சைவ மற்றும் அசைவ உணவு சமையல்களில் முக்கிய பொருளாக பயன்படுத்தும் நாட்டு வெங்காயம் விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைந்து உள்ளது.
இதில் கடந்த வாரம் வரையில் காய்கறி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் ரூ.45 முதல் ரூ.65 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று ரூ.25 முதல் ரூ.45 வரை விற்கப்பட்டது. பல்லாரி ரூ.15 முதல் ரூ.35க்கு விற்கப்பட்டது. அதிக விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பால் வெங்காயம் விலை குறைந்துள்ளாதக தெரிவிக்கப்பட்டுள்ளது.
