ஊட்டி, பிப்.21: ஊட்டியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மொழியியல் மற்றும் கலாசார பன்முகத்தன்மை குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும், பன்மொழியை ஊக்குவிப்பதற்கும் ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு ஊட்டி பிங்கர்போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தோட்டக்கலை இணை இயக்குநர் நவநீதா மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
