தேவதானப்பட்டி, பிப்.21: தேவதானப்பட்டி அருகே அரசு பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியர்கள் கென்னடி, சக்தி, சுரேஷ், அர்ச்சுனன், மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கனிமொழி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
