சட்டமன்ற தேர்தல் பணிகள்: முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

தஞ்சாவூர், பிப்.21: தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல் 2026-ல் பாதுகாப்பு பணிகளில் காவல் துறையோடு இணைந்து செயல்பட முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலர்களாக பணியாற்றிட விருப்பம் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள் அவர்களது அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டையுடன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது exweltnj@tn.gov.in என்ற இணையதள முகவரியில் அனுப்பியோ பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: