திருவப்பூர் பகுதியில் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முற்றுகை

புதுக்கோட்டை, பிப். 21: புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு டிஎன்சிஎஸ்சி சுமை தூக்கும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவப்பூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு டிஎன்சிஎஸ்சி சுமை தூக்கும் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நடத்த வேண்டிய சங்க அங்கிகார தேர்தலை உடனே நடத்த வேண்டும். வருகை பதிவேட்டில் பெயர் இல்லாமல் சுமை பணி செய்யும் தொழிலாளர்களின் பெயர்களை உடனே வருகை பதிவேட்டில் பெயர் சேர்க்க வேண்டும. 2022 உடன் பத்தாண்டுகள் பணி முடித்தவருக்கு 2022 முன் தேதியிட்டு பச்சை அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

 

Related Stories: