அறந்தாங்கியில் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் போராட்டம்

அறந்தாங்கி, பிப். 21: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் அறந்தாங்கி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்க அறந்தாங்கி வட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் ஐயப்பன், பொருளாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.போராட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியம் அரசாணை எண் 625-ஐ அமல்படுத்த வேண்டும்.

வரையறுக்கப்பட்ட பாரம்பரிய ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். அரசாணை எண் 33 -ஐ ரத்து செய்ய வேண்டும்கருணை அடிப்படையில் நான் வாரிசுதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கி வந்த 25 சதவீதம் வழங்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 வது நாளாக நேற்று கருப்பு பட்டை அணிந்து முழக்கமிட்டனர். இதில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்க உறுப்பினர்ங்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: