ராஜஸ்தான் தலித் தலைவர் காங். மாணவர் சங்க தலைவர் நியமனம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தேசியத் தலைவராக வினோத் ஜாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் மாணவர் பிரிவின் தலைவராக உள்ள அவரை தேசிய தலைவராக நியமித்து கார்கே உத்தரவு பிறப்பித்துள்ளார். ராஜஸ்தான் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக பணியாற்றிய தலித் தலைவரான ஜாக்கர், டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல்கள் உட்பட பல்கலைக்கழகத் தேர்தல்கள் நெருங்கி வரும் காலக்கட்டத்தில் தலைவர் பதவியை ஏற்றுள்ளார்.

Related Stories: