மினி பஸ் டிரைவர் கைது

சிவகாசி, பிப். 20: சிவகாசியில் போக்குவரத்துக்கழக ஊழியரை தாக்கிய மினி பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார். சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் மாரிச்சாமி(58). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று சிவகாசி பஸ் ஸ்டாண்டில் பணியில் இருந்த போது அங்கு வந்த மினி பஸ் டிரைவர் மாரனேரியை சேர்ந்த கார்த்திகேயன் (37) என்பவருடன் தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றிய நிலையில் கார்த்திகேயன், அரசு ஊழியர் மாரிச்சாமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த மாரிச்சாமி சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிந்து கார்த்திகேயனை கைது செய்தனர்.

 

Related Stories: