கஞ்சா, மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

சிவகாசி, பிப். 20: சிவகாசி கிழக்கு பகுதியில் ஒரு பள்ளியின் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த லிங்கபுரம் காலனியை சேர்ந்த தங்கமலை மகன் பிரகாஷ் (22), முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த ஜஸ்டின் பால்ராஜ் மகன் சந்தோஷ் இருதயராஜ் (19) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டியில் திருத்தங்கல் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தெற்குதெருவில் வசித்து வரும் சின்னாண்டி(38) என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார் 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சின்னாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Related Stories: