வீட்டை உடைத்து சேதம்

தேவதானப்பட்டி, பிப். 20: தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டி சடையாண்டிகோவில் தெருவைச் சேர்ந்தவர் ரெங்கசாமி மனைவி ராமதிலகம்(46). இவர் தற்போது திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பிப்.16 தேதி இவரது வீட்டை சிலர் தாக்கி சேதப்படுத்தியதாக தகவல் கிடைத்துள்ளது. பின்னர் ராமதிலகம் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை கம்பி மற்றும் கற்களை கொண்டு தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து ராமதிலகம் நேற்று ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ராமதிலகம் வீட்டை அடித்து சேதப்படுத்திய அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, கார்த்திக்ராஜா, கவியரசன், கருத்தப்பாண்டி, முருகேசன், சென்றாயன், பிரதாப், தங்கதமிழ்ச்செல்வன், மகேந்திரன், செல்வேந்திரன், ராஜபாண்டி, பிரசாத், கார்த்திக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: