தஞ்சாவூர், பிப்.20: ஆன்லைன் மூலம் நடைபெறும் நவீன மோசடியில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில்: நிதி மோசடி, போலி செயலிகள், சமூக வலைதள மோசடிகள், ஆன்லைன் டிரேடிங்கில் டெபாசிட் செய்ய சொல்வது போன்ற குற்றங்களைத் தடுக்க, 1930 என்ற உதவி எண்ணுடனும், cybercrime.gov.in < //cybercrime.gov.in/ > இணையதளத்துடனும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
முக்கியமாக, அறியாத அழைப்புகளை ஏற்காமல் இருப்பது, தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் இருப்பது, பொது வைஃபையைப் பயன்படுத்தாமல் இருப்பது, போலி இணைப்புகளை கிளிக் செய்யாமல் இருக்க வேண்டும். மேலும் வங்கியிலிருந்து பேசுகிறோம் ஓடிபி வந்து இருக்கும் என்று வரும் அழைப்புகளை நம்பி ஏமாறக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினார்.
