ஜெயங்கொண்டத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்க போராட்டம்

ஜெயங்கொண்டம், பிப்.20: ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரைவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது யுஜிசி அறிவுறுத்தலின்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.57,100 சம்பளம் வழங்க வேண்டும்.

வருடத்தில் 12 மாதமும் ஊதியம் வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணிக்கொடை ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

 

Related Stories: