காரைக்கால், பிப்.20: ரூ.3 கோடி மதிப்பில் காரைக்கால் அவ்வையார் மகளிர் கல்லூரியில் பல்நோக்கு சிறு உள்ளரங்க பணிகளை அமைச்சர் திருமுருகன், நாஜிம் எம்எல்ஏ தொடங்கி வைத்தனர். காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.3கோடி திட்ட மதிப்பீட்டில் பல்நோக்கு சிறு உள்ளரங்கம் கட்டும் பணிகளுக்கான பூமிபூஜை கடந்த 17ம் தேதி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன், காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். மேலும், இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருளரசன், உதவி பொறியாளர் செழியன், அவ்வையார் அரசு கல்லூரி முதல்வர் அம்பிகா தேவி மற்றும் விரிவுரையாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
