சேலத்தில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, தேமுதிக பொருளாளர் சுதீஷ், நேற்று சென்னையில் இருந்து பயணிகள் விமானத்தில் சேலம் காமலாபுரம் வந்தார். அவருக்கு தேமுதிக மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், ‘தொண்டர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் விருப்பத்தின் அடிப்படையில், திமுக வெற்றி கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. தேர்தலில் தேமுதிக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதி, எந்தெந்த இடம் என்பது குறித்து, கூட்டணி கட்சிகளின் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். திமுக கூட்டணியில் ராஜ்யசபா எம்பி கேட்டுள்ளோம்,’ என்று தெரிவித்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன், காரில் சேலம் புறப்பட்டு சென்றார்.
