அதிமுக ஆட்சிக் காலத்தில் சரியாக செயல்படுத்தாத அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம்: விசிக எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் குற்றச்சாட்டு

சென்னை: விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் பேரவையில் நேற்று பேசியதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் 2016 முதல் 2021 வரை கடந்த ஆட்சிக்காலத்தில் பயனடைந்தவர்கள் எண்ணிக்கை 2 பேர் மட்டுமே; செலவிடப்பட்ட தொகை ரூ.32 லட்சம் மட்டும்தான். ஆனால், திமுக ஆட்சிக்காலத்தில் ரூ.138 கோடி செலவிடப்பட்டு, சர்வதேச பல்கலைக்கழகங்களில் படித்த ஆதிக்குடி மாணவர்களின் எண்ணிக்கை 386. இரண்டு ஆட்சியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அரசின் கடன் சுமை அதிகமாகியுள்ளது என்று சொல்கிறார்கள். ஆனால் அடித்தட்டு மக்களின் கடன்சுமை குறைந்துள்ளது. பாஜ, ஆர்எஸ்எஸ் உள்ளிட்டவர்கள் எத்தகைய அவதூறுகளைப் பரப்பினாலும் இந்தியாவின் இறையாண்மையையும் தமிழ்நாட்டின் தனித்துவத்தையும் பாதுகாப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: