சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் தனது 173வது படத்தில் நடிக்க இருக்கிறார். இதை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ என்ற படத்தை இயக்கியிருந்த சிபி சக்கரவர்த்தி எழுதி இயக்குகிறார். இதையடுத்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கின்றனர். 46 வருடங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். கடைசியாக அவர்கள் ‘தில்லு முல்லு’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
இப்புதிய படத்தின் அறிவிப்பு இன்று மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிப்பதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. அந்த போஸ்டரில் கார் மெக்கானிக் ஷெட் ஒன்றில் பழைய மாடல் கார் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது 1960களில் நடக்கும் கதையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்துக்கான மற்றொரு முக்கிய அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
