தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் கேரளா ஸ்டோரி 2 படத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு: தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்

திருவனந்தபுரம்: கேரளாவை அவமதிக்கும் வகையில் கருத்துக்கள் இடம் பெற்றுள்ள கேரளா ஸ்டோரி 2 படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்யக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காமாக்யா நாராயண சிங் இயக்கிய கேரளா ஸ்டோரி என்ற படம் வரும் 27ம் தேதி திரைக்கு வருகிறது. இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் கேரளாவை சேர்ந்த ஒரு இந்துப் பெண்ணை சிலர் சேர்ந்து கட்டாயப்படுத்தி மாட்டு இறைச்சியை சாப்பிட வைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது கேரளா ஸ்டோரி 2 என்ற படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். இந்நிலையில் இந்தப் படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்யக்கோரி கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஸ்ரீதேவ் நம்பூதிரி என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம், தணிக்கை வாரியத்திற்கும், படத்தின் தயாரிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Related Stories: