கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பாஜ அதிருப்தி எம்எல்ஏவான விஷ்ணு பிரசாத் சர்மா நேற்று திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது பாஜவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
