கண்புரை அறுவை சிகிச்சைக்கு பின் தொற்று உ.பி மருத்துவமனை அலட்சியத்தால் 9 பேரின் பார்வை பறிபோன அவலம்: தனியார் மருத்துவமனைக்கு சீல்

கோரக்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் கண் மருத்துவமனையில் கடந்த 1ம் தேதி கண் அறுவை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் 30 நோயாளிகளுக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்தில் பல நோயாளிகளுக்கு கண்ணில் கடுமையான வலி, தொற்று மற்றும் பல உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து அவர்கள் டெல்லி, லக்னோ, வாரணாசியில் உள்ள பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் அவர்களின் நிலைமை மிக மோசமடைந்தது. இதையடுத்து தொற்று மேலும் பரவாமல் தடுக்க சிலரது கண்கள் அகற்றப்பட்டன. இதனால் 9 பேரின் பார்வை பறிபோனது. இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

Related Stories: