திருமணம் முடியும் வரை நிச்சயதார்த்த ஜோடிகள் செல்போனில் பேச தடை: சட்டீஸ்கரில் ஒரு சமூகம் அதிரடி

பலோட்: சட்டீஸ்கரின் பலோட் மாவட்டத்தில் இதர பிற்பட்ட வகுப்பு பிரிவில் சென் என்ற சமூகம் உள்ளது. இந்த சமூகத்தில் மாநிலம் முழுவதும் 2.50 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 70 சதவீதம் பேர் சலூன்களில் வேலை செய்து வருகிறார்கள். சமீபத்தில் இந்த சமூக மக்களிடையே நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணம் நின்று போவது அதிகரித்து வந்தது. இதையடுத்து திருமண நிச்சயதார்த்த ஜோடிகள் திருமணம் வரை தொலைபேசியில் தனிப்பட்ட முறையில் பேசுவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென் சமூகத்தின் பலோட் மாவட்டத் தலைவர் சந்தோஷ் கௌஷிக் கூறுகையில்,’ நிச்சயதார்த்தம் திருமணத்திற்கு முன்பு பையனுக்கும் பெண்ணுக்கும் இடையே மொபைல் போன் மூலம் தொடர்பு கொள்வதால் பல திருமணங்கள் நின்று போனதை நாங்கள் கண்டுபிடித்தோம். எனவே, நிச்சயதார்த்தத்திற்குப் பிறகும் திருமணத்திற்கு முன்பும் பையனுக்கும் பெண்ணுக்கும் இடையே எந்த தொடர்பும் இருக்கக்கூடாது என்ற விதியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். தேவைப்பட்டால், உரையாடல் பெற்றோரின் முன்னிலையில் நடக்க வேண்டும் ‘ என்றார்.

Related Stories: