கடையம்,பிப்.20: கடையம் விஸ்வகர்மா தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் செல்வகணேஷ் (24). நேற்று முன்தினம் இரவு தென்காசி சாலையில் உள்ள டீக்கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது கடையம் தங்கம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 17வயது கல்லூரி மாணவர், அரிவாளால் செல்வகணேஷை வெட்டினார். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே நேற்று காலை செல்வகணேஷின் உறவினர்கள் விஸ்வகர்மா தெருவில் உள்ள சுடலைமாடன் கோயில் வளாகத்தில் அரிவாளால் வெட்டிய கல்லூரி மாணவரை கைது செய்யக்கோரி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கடையம் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் டேவிட் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளியை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதைதொடர்ந்து கடையம் தங்கம்மன் கோயிலை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சமீபத்தில் நடந்து முடிந்த கடையம் முப்புடாதி அம்மன் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது தெரியவந்தது.
கடையத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
- Kadayam
- பாலசுப்ரமணியன்
- செல்வகனேஷ்
- விஸ்வகர்மா தெரு, கடையம்
- தென்காசி சாலை
- தங்கம்மன் கோயில் தெரு, கடையம்
