திமுக மீது வெறுப்பை உருவாக்க ஏங்கும் பாஜ: திருமாவளவன் தாக்கு

 

அரியலூர்: விசிக தலைவர் திருமாவளவன் எம்பி அரியலூரில் அளித்த பேட்டி: தமிழக அரசு கொண்டு வந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட். இதில் எந்த திட்டத்தையும் அறிவிக்க மாட்டார்கள். புதிதாக எந்த திட்டத்தையும் அறிவிக்கிறது கிடையாது. அது வழக்கமும் இல்லை. அரசியலுக்காக அவர்கள்(பாஜ) விமர்சித்து பேசுகிறார்கள். எப்படியாவது திமுக அரசு மீது மக்களுக்கு ஒரு வெறுப்பு உருவாக வேண்டும் என்பது அவர்களின் ஏக்கமாக இருக்கிறது. ஆனால் அது இங்கு சாத்தியமாகாது என்பது அவர்களுக்குத் தெரியாது.

பாரதிய ஜனதா கட்சியும் ஆர்.எஸ்.எஸ்-சும் இந்தியாவுக்கு எவ்வளவு ஆபத்தான சக்தி என்பதை கட்சி சார்பற்ற ஜனநாயக சக்திகள் தொடர்ந்து நாடு முழுக்க, உலகம் முழுக்க பேசி வருகிறார்கள். அந்த கட்சியைச் சேர்ந்த ஒருவர், காங்கிரஸ் கட்சியை, அதன் தலைவர் ராகுல் காந்தியை ஆபத்தானவர் என்று விமர்சிப்பது நகைச்சுவையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: