பொன்.புதுப்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்

பொன்னமராவதி,பிப்.19: பொன்னமராவதி அரசு பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பொன்.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் பொருட்டு பள்ளி புரவலர்கள் முத்தையா, ராஜ்குமார் ஆகியோர் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

இதில் பள்ளி தலைமையாசிரியர் மல்லேஷ்வரி, ஆசிரியர் பழனியப்பன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நான் முதல்வன், தமிழ் புதல்வன் திறனறிவு தேர்வு முலம் மாதம் தோறும் உதவி தொகை, சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாடு கல்வி சுற்றுலா, மேற்படிப்பு படிப்பதற்கான உதவி தொகை என பல்வேறு கல்வி, பொருளாதாரம் சார்ந்து தொடர்ந்து வழங்கப்படுகிறது.

 

Related Stories: