நீடாமங்கலம் அருகே ரமலான் நோன்புக்கு மளிகைப்பொருட்கள் வழங்கல்

நீடாமங்கலம், பிப். 19: நீடாமங்கலம் அருகில் பொதக்குடியில் ரமலான் நோம்புக்கு ஏழை மக்களுக்கு பொருள்கள் வழங்கப்பட்டது. இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்துடன் பொதக்குடி நண்பர்கள் சார்பாக 3ம் ஆண்டு ரமலான் சஹர் உணவு வழங்குவதற்காக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கு அரிசி-26கிலோ, ஜீனி-2 கிலோ, பருப்பு 2 கிலோ, ஆயில்-2 லிட்டர் உள்ளிட்ட சுமார் 41 மளிகை பொருள்கள் அடங்கிய ரூ. 5,000 மதிப்புள்ள உணவு பொருட்களை ரூ 2.5 லட்சம் மதிப்பில் 50, ஏழை குடும்பங்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்த ரமலான் மாதத்தில் ஏழை எளிய மக்கள் இந்த ரமாலன் நோன்பு எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இப்பணிகளை செய்து வருகின்றனர். பொதக்குடி நண்பர்கள் குழு முஹம்மது அஸ்லம், முகம்மது அப்சல், ஜமால் முஹம்மது, அப்துல் ஃபஹத் மூலமாக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு நேரடியாக அவர்களது இல்லத்திற்கு வீடு வீடாக வினியோகம் செய்து வருகின்றனர்.

 

 

Related Stories: