திருத்துறைப்பூண்டி, பிப். 19: கொருக்கை அரசு பாலிடெக்னிக் மாணவர் மாநில அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெற்றார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாகை புதுவை மண்டல பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையேயான தடகள போட்டியில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொருக்கை அரசு பாலிடெக்னிக் மாணவர் பிரிதீவிராஜ் குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்து திருச்சியில் நடைபெறும் மாநில தடகள போட்டிக்கு தகுதி பெற்றார். மாணவனை கல்லூரி முதல்வர் ஸ்ரீதர். ஆசிரியர்கள். பணியாளர்கள் மற்றும் உடற்பயிற்சி இயக்குநர் முனைவர் சந்திரமோகன் ஆகியோர் பாராட்டினர்.
