அறந்தாங்கி அருகே புதிய கிளை திறப்பு விழா

அறந்தாங்கி, பிப்.19: அறந்தாங்கி அருகே பத்தரசர்கோட்டை கோஞ்சகுடியில் சிங்கதமிழர் முன்னேற்ற கழகம் புதிய பதாகை கிளை திறப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பத்தரசர்கோட்டை கோஞ்சகுடியில் இளைய பேரரசர் பரதன் அறிவுறுத்தல்படி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆத்மநாதன் தலைமையில் பதிய பதாகை, கிளைகள் திறக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் புதுகை கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், ஆவுடையார்கோவில் ஒன்றிய துணை தலைவர் விக்னேஷ்,அறந்தாங்கி ஒன்றிய பொதுச்செயலாளர் பிள்ளைவயல் கைலாசம உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை புதுகை கிழக்கு மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன், சாக்கோட்டை ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அமைபாளர் கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.

 

Related Stories: