மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டியில் பள்ளி மாணவி லாவண்யா கடந்த 2022ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மதமாற்ற அழுத்தம் காரணமாகவே அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அப்போது பாஜ மாநில தலைவராக இருந்த அண்ணாமலை ஆதாரமற்ற அவதூறு கருத்துகளை கூறினார்.

இந்நிலையில், தூய இருதய மேல்நிலை பள்ளியில் படித்து வந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டது மதமாற்ற அழுத்தத்தினால் இல்லை என்று சிபிஐ தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. அண்ணாமலையின் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டு மூலமாக மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து, மத அமைதிக்கு கேடு விளைவித்து அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடியது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இத்தகைய சட்டவிரோத செயல்களை செய்து மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்ற அன்றைய பாஜ தலைவர் அண்ணாமலை, மாவட்ட பாஜ தலைவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: