தென்காசியில் 10 கிலோ கஞ்சா கடத்திய 5பேர் கைது

தென்காசி, பிப்.19: தென்காசியில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா, கார், லாரி செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தென்காசி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்பொழியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் கஞ்சா கடத்துவதாக காவல்துறைக்கு கிடைக்க ரகசிய தகவலின் பேரில் தென்காசி காவல் ஆய்வாளர் ராபர்ட் ஜெய்ன் மற்றும் சார்பு ஆய்வாளர் சத்யவேந்தன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு தென்காசி குத்துக்கல்வலசையில் வைத்து கஞ்சா கடத்தி வந்த நெட்டூர் பகுதியை சேர்ந்த இசக்கி குமார் (31), பேச்சிமுத்து (32), அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த நயினார் விக்னேஷ் (32), ராஜாராம் என்ற கோபி (26) மற்றும் அய்யனார்குளம் பகுதியை சேர்ந்த மனோ ரஞ்சித் (21) ஆகிய ஐந்து பேரை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர், இவர்கள் ஒடிசா மாநிலத்தில் இருந்து இரும்பு லோடு ஏற்றி வந்த லாரியில் ஒடிசா மாநிலம் இச்சாபுரம் பகுதியில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து பின்னர் அதனை மதுரை அருகே வைத்து காருக்கு மாற்றி கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, பைக், கார் மற்றும் லாரி ஆகிய வாகனங்களும், கஞ்சா கடத்தல் நபர்கள் பயன்படுத்திய செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: