இடிந்து விழும் ஆபத்தான நிலையில் குடிநீர் தொட்டி

குளத்தூர், பிப். 19:தருவைகுளம் அருகே உள்ளது மேலமருதூர். இந்த கிராமத்தின் மேற்கு பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இதனருகில் கோயில் மற்றும் அரசு கட்டிடங்கள் இருப்பதால் இப்பகுதியில் பொதுமக்கள், சிறுவர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். மேலும் மேல்நிலை குடிநீர் தொட்டியின் பில்லர் கான்கிரீட் பெயர்ந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. குடிநீர் தொட்டியின் அடிப்பகுதில் சிமென்ட் பெயர்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே இந்த பகுதியை கடந்து சென்று வருகின்றனர். ஏதேனும் விபத்துகள் நடப்பதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை துரிதகதியில் அகற்றுவதுடன் புதிதாக குடிநீர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: