விருதுநகர், பிப்.18: விருதுநகர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. விருதுநகர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கு திருநெல்வேலி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை நகர்மன்ற தலைவர் மாதவன் துவக்கி வைத்தார். முதல்வர் செல்லக்கனி வரவேற்றார். திருநெல்வேலி மண்டல பயிற்சி இணை இயக்குநர் கற்பகம் தலைமை வகித்தார்.
கால்பந்து, செஸ், கேரம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு மேலாண்மை குழு உறுப்பினர் குருசாமி, முன்னாள் துணை ரோட்டரி ஆளுநர் வடிவேலு, இணைந்து பரிசு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலைய ஆண் பயிற்சியாளர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். முடிவில், விடுதி கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அலுவலர் சௌந்திரபாண்டியன் நன்றி கூறினார்.
