விராலிமலை அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

விராலிமலை, பிப் 18: விராலிமலை அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் ராஜகிரி குளவாய்ப்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் செல்வக்குமார்(27) என்ற இளைஞர் அவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதைக் கண்டறிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இதேபோல் விராலிமலை தெற்கு தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பாலமுருகன்(31) என்பவர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதைக் கண்டறிந்த போலீசார் அவரையும் கைது செய்தனர். மேலும் இருவரிடமிருந்தும் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

 

Related Stories: