கோவையில் குமரி நர்ஸ் திடீர் மாயம்

மார்த்தாண்டம், பிப். 18: மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பரக்காணிவிளை பகுதியை சேர்ந்த சதீஷ், கிரிஜா தம்பதியின் மகள் மோனிஷா (21). கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இதற்காக அங்குள்ள விடுதியில் தங்கி இருக்கிறார். சம்பவத்தன்று வேலை பார்க்கும் மருத்துவமனை விடுதியில் இருந்த மோனிஷாவை காணவில்லை என சதீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் உறவினர்கள், நண்பர் வீடுகளில் தேடியும் மோனிஷா குறித்து எந்த தகவலும் இல்லை. இது குறித்து கிரிஜா மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மோனிஷாவை தேடி வருகின்றனர்.

Related Stories: