குளச்சலில் நாம் தமிழர் கட்சி பேனரில் சீமான் படம் கிழிப்பு

குளச்சல், பிப்.18 : குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது. கட்சி அலுவலக வாசலில் சீமான் படம் பொறிக்கப்பட்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பேனரை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு கிழித்து எடுத்து சென்றனர். இதை நேற்று காலை பார்த்த குளச்சல் நாம் தமிழர் கட்சி மண்டல செயலாளர் ரூபன் பொன்னுமணி குளச்சல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: