புதுடெல்லி: இந்த ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வௌியிடப்பட்டன. 13.04 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் 12 பேர் 100 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஆண்கள். 11 பேர் பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள். முதல் இடம் பிடித்த மாணவர்கள் பட்டியல்: ராஜஸ்தானைச் சேர்ந்த கபீர் சில்லர், சிரஞ்சிப் கர், அர்னவ் கௌதம், ஆந்திரா சேர்ந்த நரேந்திரபாபு காரி மஹித் மற்றும் பசலா மோஹித், ஷ்ரேயாஸ் மிஸ்ரா (டெல்லி), சுபம் குமார் (பீகார்), பவேஷ் பத்ரா (ஒடிசா), அனய் ஜெயின் (அரியானா), மாதவ் விராதியா (மகாராஷ்டிரா), புரோத் நிமாய் (குஜராத்) மற்றும் விவான் ஷரத் மஹிஸ்வரி (தெலங்கானா).
