பாட்னா: பீகாரில் 25லட்சம் பெண்களின் வங்கி கணக்குகளில் முதல்வர் நிதிஷ்குமார் அரசு ரூ.10ஆயிரம் வரவு வைத்துள்ளது. பீகாரில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் முதல்வர் மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் நோக்கம் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு பெண் சுயதொழில் செய்வதற்கான நிதி உதவி வழங்குவதாகும். இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ரூ.10ஆயிரம் வழங்கப்படுகின்றது. இந்த நிதியை வேலைவாய்ப்புக்காக திறம்பட பயன்படுத்தப்பட்டு இருந்தால் ரூ.2லட்சத்துக்கான தொகையானது பகுதியாக பிரிக்கப்பட்டு வழங்கப்படும். இந்நிலையில் முதல்வர் மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் கீழ் 25லட்சம் பெண்களின் வங்கி கணக்குகளில் நேற்று முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு ரூ.10ஆயிரம் வரவு வைத்துள்ளது. முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான அன்னே மார்க்கில் நடைபெற்ற விழாவில் நேரடி பலன் பரிமாற்றம் மூலம் மொத்தம் ரூ.2500கோடி முதல்வர் நிதிஷ்குமார் வழங்கியிருக்கிறார்.
