அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பில்கேட்ஸ்

திருமலை: ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள தலைமை செயலகத்திற்கு நேற்று பிரபல தொழிலதிபரும் பில்கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனருமான பில் கேட்ஸ் வந்தார். அவரை முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் வரவேற்றனர். அப்போது முதல்வர் சந்திரபாபுவைப் பார்த்ததும் பில் கேட்ஸ் அவரை அன்புடன் ‘வணக்கம் நண்பரே, நலமா?’ என்று பில் கேட்ஸ் கேட்டார். அதன் பிறகு முதல்வர் தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களையும் முதன்மை செயலாளர் விஜயானந்தையும் பில் கேட்ஸுக்கு அறிமுகப்படுத்தினார். இதனையடுத்து பில் கேட்ஸ்சை தலைமை செயலகத்தில் உள்ள ரியல் டைம் கவர்னன்ஸ் மையத்திற்கு அழைத்து சென்று பொது சேவைகள், நிர்வாக செயல்பாடு, மக்களுக்கான கொள்கைகள் மற்றும் அவற்றின் மூலம் அடையப்பட்ட முடிவுகள் குறித்து சந்திரபாபு விளக்கம் அளித்தார்.

Related Stories: