வாக்காளரை நீக்க தவறான தகவல் தந்த பாஜ மாவட்ட செயலாளர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள பைவளிகா பகுதியை சேர்ந்தவர் முகம்மது (71). இவர் இங்கு தான் பிறந்து வளர்ந்தார். பலமுறை இவர் தேர்தலில் வாக்களித்துள்ளார். இந்நிலையில் முகம்மது இந்திய குடிமகன் அல்ல என்றும், எனவே அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறி காசர்கோடு மாவட்ட பாஜ செயலாளரான லோகேஷ் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தார். விசாரணையில் லோகேஷ் தாக்கல் செய்திருந்த ஆவணங்கள் தவறானவை என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து லோகேஷ் மீது வழக்கு பதிவு செய்ய மாவட்ட கலெக்டர் இன்பசேகர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: