சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: நீண்ட பாலங்களை அமைத்து சாதனை படைத்துவரும் நமது திராவிட மாடல், அடுத்து மதுரையில் அமைகிறது 1.3 கிலோமீட்டர் நீளமுள்ள ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்’. தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு, இந்திய நாட்டின் விடுதலைக்காக தனக்கெனப் பாதையை உருவாக்கி, நம் தென்மாவட்ட மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய வீரத்தின் அடையாளமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயரைச் சூட்டி பெருமிதம் கொள்கிறேன். ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தை வரும் 21ம் நாள் என்னுடைய மதுரை பயணத்தில் திறந்து வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
