சென்னை: இந்திய கால்நடை மருத்துவ சிகிச்சை சங்கமும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும் இணைந்து சென்னை முட்டுக்காட்டில் உள்ள எம்ஜிஎம் மாநாட்டு கூடத்தில் தேசிய கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. இந்திய ராணுவ கால்நடை மருத்துவப் பணிகள் இயக்குனர் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்க மலரை வெளியிட்டு தொடக்க உரையாற்றினார். வரும் 18 வரை என 3 நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கில், கால்நடை மருத்துவத்தில் நவீன தொழில் நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு தொடர்பான வாய்ப்புகளும் சவால்களும் என்ற தலைப்பில் அறிவியல் அறிஞர்கள் கலந்துகொண்டு அறிவியல் கட்டுரைகளை விவாதிக்க உள்ளனர்.
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் 3 நாள் தேசிய கருத்தரங்கம்
- தேசிய கருத்தரங்கு
- கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம்
- சென்னை
- தேசிய
- இந்திய கால்நடை மருத்துவ சங்கம்
- தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம்
- எம்ஜிஎம் மாநாட்டு மண்டபம்
- முட்டுக்காடு, சென்னை
- இந்திய இராணுவ கால்நடை சேவைகள்
- பாலாஜி
