×

பிரதமர் மோடி, நாட்டை கைவிடுகிறாரா? விஜய்வசந்த் எம்.பி பேட்டி

 

நாகர்கோவில்: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை கண்டித்தும், திட்டத்தை சிதைக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் கிள்ளியூர் தொகுதியில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ, பாத யாத்திரை நடத்தி வருகிறார். இதற்கு ஆதரவு தெரிவித்து விஜய் வசந்த் எம்.பி. பூத்துறை பகுதியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மக்களுக்கு வேலை கொடுக்காமல் மோடி அரசு 100 நாள் வேலை திட்டத்தை முடக்க பார்கிறார்கள். இதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

அமெரிக்கா – இந்திய வர்த்தக ஒப்பந்தம், ராகுல்காந்தி கூறியது போல் கட்டாயத்தினால் ஏற்படுத்தபட்டது. வெளியுறவு துறைக்கு தெரியாமல் நடைபெற்றுள்ள ஒப்பந்தம் என கூறுகிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொருள்களை அவர்கள் இறக்குமதி செய்தால் பூஜ்யம் சதவிகிதமும், நாம் ஏற்றுமதி செய்தால் 18 சதவிகிதமும் வரி விதிக்கப்படுள்ளது.

பல இடங்களில் திருத்தம் கொண்டு வந்துள்ளனர். மோடியை பிரதமராக நாம் பார்கும்போது, அவர் நாட்டை கைவிடுவது போன்று தெரிகிறது. ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற விவகாரத்தில், கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுதான் எங்களின் முடிவு.

Tags : Modi ,Vijayvasand ,B. Nagarko ,Rajeshkumar ,MLA ,Killiyur ,Mahatma Gandhi ,Union government ,Vijay ,
× RELATED ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு...