- கரூர் மாவட்டம்
- பாலாஜி
- சென்டில்
- கரூர்
- வென்ற தமிழ் பெண்கள்
- திமுகா
- கரூர் கலைஞர் அறிவியல்
- மாவட்ட செயலாளர்
- செந்தில்பாஜி
- சட்டமன்ற உறுப்பினர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
கரூர்: கரூர் கலைஞர் அறிவாலயத்தில் திமுக சார்பில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்கள் பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் பெண்களுக்கென பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். முதல் முறையாக தந்தையின் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்று அந்தஸ்தை கலைஞர் பெற்று தந்தார்.
அந்த வழியில் இன்று முதல்வரின் புதுமைப்பெண், மகளிர் மேம்பாட்டு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம், திருமண நிதி உதவிகள், சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவிகள், பணிபுரியும் மகளிர் விடுதிகள், மற்றும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் போன்றவை முக்கியமானது. இத்திட்டங்கள், மகளிர் கல்வி, பொருளாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன.
கல்வி மற்றும் நிதி உதவி திட்டங்கள், அரசுப் பள்ளிகளில் 6-12ம் வகுப்பு படித்து, உயர் கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, பெண் குழந்தை பிறந்திருந்தால் அவரின் பெயரில் ரூ.50,000 வைப்புத்தொகை செலுத்தப்படுகிறது. தையல் தொழிலில் ஈடுபடும் மகளிருக்கு தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இத்தனை திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்து கூறி வரும் சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
