×

இந்தியா கூட்டணியின் தலைவராக இருக்க தகுதியுள்ள சிறந்த நபர் மு.க.ஸ்டாலின்தான்: காங். மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர்

டெல்லி: இந்தியா கூட்டணியின் தலைவராக இருக்க தகுதியுள்ள சிறந்த நபர் மு.க.ஸ்டாலின்தான் என காங். மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். மேலும் ‘ராகுல் காந்தி பிரதமராக வருவதற்கு மு.க.ஸ்டாலின் துணை நிற்பார். ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக ஆகுமாறு காமராஜரிடம் கேட்டபோது அவர் அதை மறுத்தார். தற்போது காமராஜர் இடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன், நான் விலகவில்லை’ எனவும் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.

Tags : India Alliance ,K. Stalin ,Senior ,Manisankar Aiyar ,Delhi ,Mu. K. Kang ,Stalin ,Manisankar Ayer ,Rahul Gandhi ,Jawaharlal Nehru ,India ,
× RELATED பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா கண்டனம்