பதிவுரு எழுத்தர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு அரியலூர் கலெக்டர் அழைப்பு

அரியலூர், பிப். 16: பதிவுரு எழுத்தர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரியலூர் மாவட்டம், நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் உள்ள ஒரு பதிவுரு எழுத்தர் காலிப்பணியிடத்தினை பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பான விவரங்கள் அரியலூர் மாவட்ட நில அளவை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதல் தளம், அறை எண்.119-ல் இடம் பெற்றுள்ளது. விண்ணப்பிப்பவர்கள் மேற்கண்ட முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். அதன் விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் https://ariyalur.nic.in அரியலூர் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 9. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: