சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்க நடவடிக்கை தேவை

அரியலூர், பிப். 16: அரியலூர் நகரின் மையப்பகுதியில் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் செல்வோருக்கு கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைகளிடம் புகார் அளித்தும், இதுவரை நிரந்தர தீர்வு எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறி சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்த கூடாது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Related Stories: