×

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் பார்வையாளர்களை கவர்ந்த நாய், பூனை எழில் கண்காட்சி

புதுச்சேரி, பிப். 16: புதுச்சேரி அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் நாய் மற்றும் பூனை எழில் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் நேற்று நடந்தது. இதில் சிப்பிப்பாறை, கன்னி, ஜெர்மன் ஷெப்பர்ட், பொமரேனியமன், ஹஸ்கி, டாபர்மேன், அமெரிக்கன் புல்டாக், லேப்ரடார், டேஷ்ஹன்ட், டால்மேஷன், கிரேட்டேன், கோம்பை, ஹெடரீவன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாய் வகைகளில் மொத்தம் 160 நாய்கள் பங்கேற்றன. மேலும் பல்வேறு வகையான பூனைகளும் இக்கண்காட்சியில் கலந்து கொண்டது. உள்நாடு, வெளிநாடுகளின் பல்வேறு நாய்களை, பூனைகளை பொதுமக்கள், செல்லப் பிராணிகள் வளர்ப்பு பிரியர்கள் பலரும் பார்த்து ரசித்தனர்.

ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், பாகூர் ஆதிங்கப்பட்டு பகுதியை சேர்ந்த ஸ்டீபன் வளர்க்கும் கன்னி வகையை சேர்ந்த நாய் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச்சென்றது. விழாவில் வேளாண் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி, துறை செயலர் சவுத்ரி முகமது யாசின் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். துறை இயக்குநர் லதா மங்கேஷ்கர் வரவேற்றார். இணை இயக்குநர் காந்திமதி நன்றி கூறினார்.

Tags : Puducherry Botanical Garden ,Puducherry ,Botanical Garden ,Animal Husbandry and Veterinary Welfare Department ,Puducherry Government ,
× RELATED ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுக...