×

பராமரிப்பு பணிகள் காரணமாக சாக்கோட்டை பகுதியில் நாளை மின்வெட்டு

கும்பகோணம், பிப். 16: சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை 17ம்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு மின் பகிர்மான கழக கும்பகோணம் மாநகர் உதவி செயற்பொறியாளர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் பெறும் கும்பகோணம் மாநகரம் தவிர உமாமகேஸ்வரபுரம், கோ.சி.மணி நகர், தாராசுரம், எலுமிச்சங்காபாளையம், அரியதிடல், அண்ணலக்ரஹாரம், திப்பிராஜபுரம், விசலூர், சிவபுரம், உடையாளூர், சுந்தரபெருமாள்கோவில், நாச்சியார்கோவில், பட்டீஸ்வரம், வலங்கைமான், ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags : Chakottai ,Kumbakonam ,Chakottai Substation ,Stalin ,Kumbakonam Municipal Corporation ,Tamil Nadu Electricity Distribution Corporation ,
× RELATED திண்டுக்கல் அருகே கஞ்சா விற்றவர் கைது