- கஞ்சா
- திண்டுக்கல்
- தாடிகொம்பு
- இன்ஸ்பெக்டர்
- இளஞ்செழியன்
- எஸ்ஐ பாண்டியன்
- எட்டேட்டு நல்லசாமி
- ராஜகுரு
- சிறப்பு
- எட்டேட்டு பழனிச்செல்வம்
- பத்மா நகர்
- செங்குளம்…
திண்டுக்கல், பிப். 16: தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், எஸ்ஐ பாண்டியன், ஏட்டுகள் நல்லச்சாமி, ராஜகுரு, தனிப்பிரிவு ஏட்டு பழனிச்செல்வம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செங்குளம் பத்மாநகர் பகுதி ரோட்டில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் தாடிக்கொம்பு வடக்கு தெருவை சேர்ந்த புட்லு என்ற ஹரிஹரசுதன் (27) என்பதும், டூவீலரில் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் ஹரிஹரசுதனை கைது செய்து, அவரிடமிருந்த 1.200 கிலோ கிராம் கஞ்சா, டூவீலரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
