×

அய்யம்பேட்டையில் 1.5 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

தஞ்சாவூர், பிப். 16: அய்யம்பேட்டையில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். அய்யம்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகரஜோதி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். குடமுருட்டி ஆற்றங்கரை பகுதியில் சென்று கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் 3 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.

போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். இதில் ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். மற்ற 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், அய்யம்பேட்டை காந்தி நகர் முதல் தெருவை சேர்ந்த ஹேமதீபன்(20) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் சோதனை செய்த போது அவரிடம் 1.5 கிலோ கஞ்சா விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹேமதீபனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Tags : Ayyampettai ,Thanjavur ,Sub-Inspector ,Makarajothi ,Kudamurutti ,
× RELATED திண்டுக்கல் அருகே கஞ்சா விற்றவர் கைது